புதுக்கடை அருகே மறுகண்டான்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் சுஜின் (37) இவர் மரவேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ஐரேனிபுரம் பகுதியில் பொது இடத்தில் மது போதையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு உண்டு பண்ணினார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஜாண் றோஸ் என்பவர் சுஜினை எச்சரித்துள்ளார். ஆனால் மீண்டும் அந்த நபர் அங்கும் இங்கும் உளறியபடி நடந்து சென்று பிரச்சனை ஏற்படுத்தினார். இதையடுத்து போலீசார் அவரை போலீசார் பிடித்து புதுக்கடை காவல் நிலை கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தனர்.