விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*;
தனியார் நிறுவனம் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பை அகற்ற காலதாமதப்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு* விருதுநகர் அருகே ஆமத்தூரில் விவசாயிகள் செல்லும் பொது பாதை மற்றும் நீர்நிலைகளை சிவகாசியை சேர்ந்த தனியார் அச்சக நிறுவனம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஆக்கிரமித்து இரும்பு வேலி அமைத்துள்ளதாகவும் இதனால் விவசாயிகள் தங்களது வேளாண் நிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளதாகவும், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த ஆக்கிரமிப்பு அகற்றக் கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக ஆய்வு செய்ய வட்டாட்சியர் மாவட்ட சிறப்பு ஆர்டிஓ ஆகியோர் ஆய்வு செய்த ஆக்கிரமிப்பு என அறிக்கை சமர்ப்பித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது இதை அடுத்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகம் நீண்ட காலமாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அது தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து தமிழ் விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார் இதனால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது பேட்டி OA நாராயணசாமி