டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.*
டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியில் செயல்படும் 12066 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடைக்கு சென்ற பாஜகவினர் கடை முன்பாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி மதுக்கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மகளிர் அணி ஒன்றிய தலைவர் சாந்தகுமாரி, துணைத் தலைவர் அம்சவல்லி உள்ளிட்ட ஐந்து பேரை வன்னியம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.