கால்நடை கணக்கெடுப்பு பணி : கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு 

கால்நடை பராமரிப்புத்துறை;

Update: 2025-03-21 17:20 GMT
தஞ்சை  மாவட்டத்தில், 8 லட்சம் வீடுகளில் கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.  இந்த பணியை  கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் நவநீதகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கணக்கெடுப்பு  தமிழகத்தில் 21-ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணி கடந்த அக்டோர் 25-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி முடிவடைந்தது. தஞ்சை மாவட்டத்தில் 8 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.  இதில் 6 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள 2 லட்சம் வீடுகளுக்கு கண்கெடுப்பு மேற்கொள்வதற்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு  மார்ச் இறுதி வரை  கால்நடை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் (சிறப்பு திட்டம்) டாக்டர் நவநீதகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் வல்லம், குலமங்கலம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தார். மானியத்தில் கோழிகள் மானிய விலையில் கோழிகள் வழங்கப்பட்டுள்ளதையும், மேலும் மாதிரி வரைவு கணக்கெடுப்பு பணியின் மூலமாக தஞ்சை மாவட்டத்தில் பால், முட்டை, இறைச்சி உற்பத்தியை கணக்கீடு செய்வதற்கு வருடத்திற்கு 3 பருவமாக கோடைகாலம், மழைகாலம், குளிர்காலம் தலா 4 மாதங்களில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்வதை திருமலைசமுத்திரத்தில் நேரடி ஆய்வு செய்தார். நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் சிறு அளவிலான தொழில் முனைவோர் திட்டத்தில் 250 கோழிகள் 50 சதவீத மானியத்தில் வழங்குவதையும், பெண் பயனாளிகளுக்கு தலா 40 கோழிகள் வீதம் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் 50 சதவீதம் மானியமாக ரூ.1,600 வழங்குவதை திருமலைசமுத்திரம் மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நேரடி ஆய்வு செய்தார். தீவன வளர்ப்பு நீர்வள, நிலவள மேம்பாட்டு திட்டம், காவிரி உபவடிநில பகுதியில் உளூர், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் இந்த திட்டத்தின் மூலம் பிறந்த கிடேரி கன்று பிறத்தல் மற்றும் தீவன வளர்ப்பை நேரடி ஆய்வு செய்தார். பிற்பகலில் தஞ்சையுல் அனைத்து அலுவலர்களுடன் திறனாய்வு கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து திட்டப்பணிகளை அலுவலகம் மற்றும் கால்நடை பணிகளை உரிய நேரத்தில் செவ்வனே செய்து முடிக்க அறிவுரை வழங்கினார். இதில், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் அப்துல்காதர், உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் சரவணன், கண்ணன், மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் செரீப், தாமோதரச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News