கோவை: இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !

கோவையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-03-22 00:58 GMT
கோவை: இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !
  • whatsapp icon
கோவையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் சக்திவேல் (வயது 22). இவர் ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது குற்றச் செயல்கள் மக்களை அச்சுறுத்தும் விதமாக இருந்ததால், சக்திவேல் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், குற்றவாளி சக்திவேல் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள சக்திவேலுவிடம், குண்டர் சட்டத்திற்கான காவல் ஆணை நேற்று வழங்கப்பட்டது.

Similar News