கோவை: மாநகரை விட்டு ரவுடிகள் வெளியேற உயர் நீதிமன்றம் உத்தரவு
தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் கோவை மாநகரை விட்டு வெளியேற காவல் ஆணையர் அறிவித்தார் - குற்றவாளி வெளியேற ஆணையரின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்.;

கோவை மாநகரில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பாலகிருஷ்ணன் (எ) மோர் மார்க்கெட் பாலா உள்ளிட்ட 27 ரவுடிகளை மாநகரை விட்டு வெளியேற காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், காவல்துறை ஆணையரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும், பாலகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்தார். காவல்துறை ஆணையரின் உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.