கோவை: சிறுத்தை அட்டகாசம்: பதறித் துடிக்கும் மக்கள் !

கோவையில் பதிமலை வடப்புறம் சட்டக்கல் புதூர் பகுதியில் அதிகாலையில் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.;

Update: 2025-03-22 01:30 GMT
கோவை: சிறுத்தை அட்டகாசம்: பதறித் துடிக்கும் மக்கள் !
  • whatsapp icon
கோவையில் பதிமலை வடப்புறம் சட்டக்கல் புதூர் பகுதியில் நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு கட்டப்பட்டிருந்த நாயை கடித்து குதறியதோடு மட்டுமல்லாமல், அதன் தலையை துண்டித்து உடம்பை சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதேபோல், மதுக்கரை அடுத்த திருமலையம்பாளையம் அருகே குமட்டிபதி பகுதியில் சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து குதறியுள்ளது. அடுத்தடுத்து சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால், இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால், மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News