அருமனையில் வீட்டு முன்பு படுத்த மூதாட்டி

கடன் வாங்கிய பணம் கேட்டு;

Update: 2025-03-22 04:30 GMT
குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை  சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை மனைவி லட்சுமி குட்டி (78). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதி சேர்ந்த அசோகன் (50) என்பவருக்கு ரூ. 10 ஆயிரம்  கடன் கொடுத்துள்ளார்.  தற்போது ஐந்து வருடமாக திருப்பிக் கொடுக்கவில்லை. பணத்தை கேட்டபின் மூதாட்டியை மிரட்டியதாக தெரிகிறது.        இந்த நிலையில் நேற்று மதியம் 1:30 மணியளவில் ஒரு கட்டிலுடன் சென்று லட்சுமி குட்டி அசோகன் வீட்டு முன் படுத்து கொண்டார். பணம் தருவது தரும் வரை நகர மாட்டேன் என்று கூறினார். ஆனால் அசோகன் வீட்டில் இல்லை. உடனடியாக அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். மாலையில் மழை பெய்தும் மூதாட்டி  எழும்பவில்லை. இது குறித்து இடைக்கோடு பேரூராட்சி கவுன்சிலர் சுதாகரன்  அருமனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.         போலீசார் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அசோகனை செல்போனில் தொடர்பு கொண்டனர்.  அப்போது அவர் இன்று வருவதாக தகவல் அளித்தார். அதன் பேரில் மூதாட்டியிடம் இன்று பணம் வாங்கித் தருவதாக  போலீசார் கூறினார்கள். அதன் பின்னர் அவர் எழுந்து வீட்டிற்கு சென்றார். பணம் இன்று வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவேன் என மூதாட்டி கூறினார்.

Similar News