முத்தையாபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்தது!
தூத்துக்குடி இன்று அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக முத்தையாபுரம் தெற்கு தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்பு;
தூத்துக்குடி இன்று அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக முத்தையாபுரம் தெற்கு தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்பு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி முதல் சுமார் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர் இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் தெற்கு தெரு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்