குமரி மாவட்டம் அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கி 17 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. குருமகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் விழாவுக்கு தலைமை தாங்கி திருஏடு எடுத்து கொடுத்துவிழாவை தொடங்கி வைத்தார். அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து திரு ஏடு வாசிப்பும் நடந்தது. திருஏட்டினை தங்கேஸ்வரி ,ஆண்டாள் ,சரஸ்வதி ,ஆகியோர் வாசிக்க நாஞ்சில் ஜீவா பாராயணம் உரை ஆற்றினார். தொடர்ந்து ஏப்ரல் மாதம் 4.ஆம் தேதி அய்யாவுக்கு திருக்கல்யாண திருவிழாவும் 5ஆம் தேதி அம்மைமார் திருக்கல்யாண திருவிழாவும், 6 ஆம் தேதி பட்டாபிஷேக திருவிழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு வளவன் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தினமும் மாலை 5 மணி முதல் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. திருவிழாயொட்டி தர்மங்களும் சிறப்பு பணிவிடையும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்து வருகின்றனர்.