கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து துறை (நாகர்கோவில் வட்டம்) சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இன்று (22.03.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், :- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 52 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றைய தினம் 17 பேருந்துகள் பிற மாவட்டங்களான விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து துறை மூலமாக நமது மாவட்டத்தில் பெரிய பேருந்துக்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கும், புதிய பேருந்து வழித்தடம் அமைத்து மினிபேருந்துக்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சிரமமில்லமால் பயணம் மேற்கொள்ளமுடியும். என கூறினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், எம் எல் ஏக்கள் ராேஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ் , ஜே.ஜி.பிரின்ஸ், தாரகை கத்பர்ட், மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.