கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை!
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் சாலை, கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் சாலை, கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கல்லேரி சாலையில் ரூ.10.44 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, ரூ.5.29 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், காமாட்சியம்மன் கார்டன் விரிவாக்கம் குடியிருப்பில் ரூ.7.20 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒன்றியக் குழு தலைவர் பூமி பூஜை செய்தனர்.