நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால் புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). இவர் ஒழுகினசேரியில் உள்ள ஒரு விடுதியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் இரவு ஆராட்டுரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீஸ் நிலைய சாலையை சேர்ந்த வினோத்குமார் என்ற செல்வம் (31) என்பவர் முருகனை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த செல்வம், முருகனை அவதூறாக பேசி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டார் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, வினோத் குமாரை இன்று கைது செய்தனர். வினோத்குமார் மீது ஏற்கனவே கோட்டார், வடசேரி, சுசீந்திரம் மற்றும் பூதப்பாண்டி போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதும், ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.