வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு!
பட்டா பெற விண்ணப்பித்த பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.;
நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பென்னாத்தூர் பேரூராட்சியில் பட்டா பெற விண்ணப்பித்த பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கோட்டாட்சியர் செந்தில்குமார். உதவி இயக்குநர் (நில அளவை) குமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.