கடலூர்: கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.;

Update: 2025-03-22 15:25 GMT
கடலூா் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.  இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் வரும் 29-ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்றும் "கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Similar News