தமிழ்நாட்டில் நடந்து வரும் கொலை கொள்ளை கற்பழிப்பு, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாமல் மாணவர்களுக்கு தீங்கு இழைப்பு ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறும் டாஸ்மார்க் ஊழல் இது போன்றவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு சார்பாக அதன் மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.மோகன்ராஜ் தலைமையில் அவரது இல்லம் முன்புறம் வைத்து கண்டன கறுப்பு கொடி ஆர்ப்பட்டம் நடந்தது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் லட்சுமணன், சாய்ரோஷன், ராஜா, எம்.எஸ்.ரோஷன், விகோய் சுரேஷ், அஜய், அருள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்