குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் வளாக வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்;

Update: 2025-03-22 16:32 GMT
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையம் சார்பில் மையத்தின் சார்பில் வெள்ளியன்று இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமினைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில், 25 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவன வேலை வாய்ப்புகளுக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கப் பதிவு செய்தன. இதில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் 757 பேர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.  வேலைக்கான நேர்காணலில் 592 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு வேலைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்வில் கல்லூரி தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர்விழி, உள்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.சந்திரகலா, கல்லூரி நூலகர் ஆர்.சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.கண்மணி ஜோன் ஆப் ஆர்க், உதவி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.சபருனிஷா ஆகியோர் வேலை வாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Similar News