ராஜபாளையம் அருகே நடைபெற்ற அரசுப் பள்ளி நூற்றாண்டு விழாவில் ஆட்சியர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே நடைபெற்ற அரசுப் பள்ளி நூற்றாண்டு விழாவில் ஆட்சியர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.;
ராஜபாளையம் அருகே நடைபெற்ற அரசுப் பள்ளி நூற்றாண்டு விழாவில் ஆட்சியர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் கடந்த 1924ம் ஆண்டு முதல் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகளையும், கல்வியின் அவசியம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பெற்றோர்கள் மத்தியில் பேசினார். குறிப்பாக ஜாதி மத இன வேறுபாடுகளை கடந்து மானுடத்தின் அம்சங்களை பெற்று சிறப்பான வாழ்வை வாழ கல்வி அடிப்படை என தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.