செங்கோட்டையில் மழையினால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தில் எம்எல்ஏ ஆய்வு

மழையினால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தில் எம்எல்ஏ ஆய்வு;

Update: 2025-03-23 01:37 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள பயன்பாடு இல்லாத கட்டடத்தின் மேற்கூரை மற்றும் கம்புகள் பெயா்ந்து விழுந்தது. அந்த கட்டடத்தை கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சனிக்கிழமை பாா்வையிட்டாா். ஆய்வின்போது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலணிகள், புத்தகப் பை உள்ளிட்டவை ஏராளமான இருந்ததைப் பாா்வையிட்ட எம்எல்ஏ, அவற்றை மாணவா்களுக்கு உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது அதிமுகவின் திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Similar News