கோவை: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

கோவை மாநகரம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.;

Update: 2025-03-23 02:16 GMT
கோவை மாநகரம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், 295 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களில் உள்ள 15,000 முதல் 20,000 வரையிலான காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்றனர். 8-ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை சுமார் 4,000 வேலை தேடும் நபர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர். முகாமில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பித்தனர். தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட வளர்ச்சிக்கான பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ் குமார், கோவை மேயர் ரங்கநாயகி, இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாம், கோவை மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

Similar News