டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு

கன்னியாகுமரி;

Update: 2025-03-23 03:52 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு தேரிவிளை ஊரில் புதிதாக மதுபான கடை திறக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை  அறிந்த அப்பகுதி மக்கள் கடை திறக்கக் கூடாது என கோஷமிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.       தகவல் அறிந்ததும் சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மதுபான கடை தற்சமயம் திறக்கப்படாது எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News