நாகர்கோவிலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

376 பேர் தேர்வு;

Update: 2025-03-23 04:20 GMT
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி  வழிகாட்டும் மையம் நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடத்தியது.      நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் நடந்த இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஐந்து திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டன. 1903 வேலை நாடுனர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 281 வேலை நாடுனர்கள் பணி நியமனம் பெற்றனர். 376 வேலை நாடுனர்கள் முதற்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டனர்.       தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெயசேகரன் வரவேற்றார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட கலந்து கொண்டனர்.

Similar News