செல்போன் திருட்டு விவகாரத்தில் நண்பரை கட்டையால் தாக்கியவர் கைது
போலீசார் நடவடிக்கை;

சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 21). கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர் மணி (28) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தினேஷ் குமாரின் செல்போன் காணாமல் போனதாக தெரிகிறது. வீட்டிற்கு சென்று பார்த்த போது போன் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தினேஷ் மணியிடம் சென்று செல்போனை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த கட்டையால் தினேஷ் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நண்பரை தாக்கியதாக மணியை போலீசார் கைது செய்தனர்.