
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளங்கினா விளை ஊராட்சியில் சண்ண விளை தொடங்கி நெடும்புறத்து விளை வழியாக விவசாய நிலங்களுக்க செல்லும் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலை நடுவில் தனி நபர் ஒருவர் கட்டுமானம் ஒன்றை கட்டி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக ஜான்சன் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் கட்டுமான பணிக்கு ஆதரவாக சிலரும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி சிலரும் நேற்று திரண்டனர். இந்த நிலையில் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் பிரபு மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த அளவீடு செய்து அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் இருதரப்பினர் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்ற பின்னர் பொதுமக்கள் சிலர் அந்த கட்டுமானத்தை முழுவதும் இடித்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.