
கன்னியாகுமரி அருகே சாமி தோப்பில் அமைந்துள்ள காமராஜ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 33வது ஆண்டு விழா நடைபெற்றது விழாவுக்கு பள்ளி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக அதிகாரி அஜித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை நித்யா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ராஜகமங்கலம் மரைன் சயின்ஸ் டெக்னாலஜி சென்டர் பேராசிரியர் . த.சிற்றரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை பள்ளி துணை தலைவர் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி அறிமுகம் செய்து பேசினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அம்பிகா, செயலாளர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதல்வர் தங்க நித்தியா நன்றி கூறினார். .தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.