
கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ மாணவிகள் குமரி மாவட்டம், சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்பு வனத்திற்கு நேற்று வருகை தந்தனர். பின்னர் அய்யா வைகுண்டசாமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அய்யா வழிபாட்டு முறை பற்றி குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அன்புவனம் வருகை தந்த ஆராய்ச்சி மாணவர்கள் கிருஷ்ணகுமார், அதுல்யா தலைமையிலான மாணவர்களை அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி வரவேற்றார். மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கான பல தகவல்கள் இங்கு கிடைத்ததாக தெரிவித்தனர்.