ஒப்பந்ததாரரை தாக்கியதாக  ஒருவர் கைது

கொல்லங்கோடு;

Update: 2025-03-23 06:27 GMT
ஒப்பந்ததாரரை தாக்கியதாக  ஒருவர் கைது
  • whatsapp icon
குமரி மாவட்டம் புன்னமூட்டு கடை பகுதியை சேர்ந்தவர் கமாலி (53). இவர் மார்பிள்  மொத்த ஒப்பந்த வேலை செய்து வருகிறார். இவருக்கு காரோடு பகுதியை சேர்ந்த அனிஸ் (33) என்பவர் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் அனிஷிடம் கபாலி ரூபாயை கேட்டுள்ளார்.        இதில் ஆத்திரமடைந்த அனீஸ் மற்றும் அடைக்கா குழி பகுதியைச் சேர்ந்த அஜிஸ் (35), காரோடு பகுதி சிபு, அதே பகுதி அஜின் ஆகியோர் சேர்ந்து கமாலி மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கபாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.        இது சம்பந்தமான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அஜீசை நேற்று கைது செய்தனர். மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

Similar News