மருத்துவ கல்லூரிக்கு வந்தவரை மிரட்டியவர் கைது

நாகர்கோவில்;

Update: 2025-03-23 07:05 GMT
குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (52). இவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இருந்தார். மருத்துவமனையின் பின்புற கேட்டில் நின்று கொண்டிருந்த போது ஆசாரிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த கிறிஸ்டோ வினிஷ் (23) என்பவர் அங்கு வந்து சஜினிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கிறிஸ்டோ வினிஷ் நான் இந்த ஏரியா ரவுடி என கூறி மறைத்து வைத்திருந்த அறிவாளால் சஜினை வெட்ட முயன்றார்.        இதை பார்த்ததும் பொதுமக்கள் அச்சத்தில் ஓடினார்கள். இதை அடுத்து கிறிஸ்டோ பினிஷை  சிலர் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களை அரிவாளை காட்டி மிரட்டி உள்ளார்.      இது குறித்து பாதிக்கப்பட்டது சஜின் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கிறிஸ்டோ  பினிஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. காவல் நிலைய குற்றச் சரித்திர பதிவேட்டிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News