மாவீரன் பகத்சிங் 94 வது நினைவு தினத்தையொட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்த தான முகாம் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி வளகத்தில் நடைபெற்றது நிகழ்வில் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த்குமார்சிங் ஐ.ஏ.எஸ்., கலந்து கொண்டு துவக்கி வைத்தார்,நகர்மன்றத்தலைவர் டி.என்.முருகன்,ரோட்டரி சங்க செயலாளர் எம்.எஸ்.கோத்தம் சந்த்,டாக்டர் கமலசேகரன்,அமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.வி.சரவணன்,சிபிஐ மாவட்டச்செயலாளர் கே.ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கி மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற இளைஞர்களிடம் சுமார் 50 யூனிட் இரத்தம் பெற்றனர், இளைஞர் மாணவர் பெருமன்ற மாவட்ட நிர்வாகிகள் கே.இராமன்,எஸ்.விஜய்,பி.கணேசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர் கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத்தலைவர் எம்.கலியபெருமாள்,நகர செயலாளர் பி.எச்.கே.பசீர் அகமது,சிபிஐ நகரச்செயலாளர் கிப்ஸ்,நடைபாதை வியாபாரிகள் சங்க நகரத்தலைவர் ஆர்.அருண்குமார் உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்டனர்