நலத் திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்
மதுரையில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்டம் முனிச்சாலை பகுதியில் உள்ள காமராஜபுரம் பகுதி திமுக சார்பில் இன்று (மார்ச்.23) பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வினை தளபதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். உடன் பூமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் வேலுச்சாமி, பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.