குமரி : ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் 

நாகர்கோவில்;

Update: 2025-03-23 12:14 GMT
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த கோரியும் மேலும் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.        கோரிக்கைகளை நிறைவேற்ற இன்னமும் காலம் தாழ்த்தினால் வரும் 30 ஆம் தேதி சென்னையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கூடி அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. தாஸ் அறிவித்தார்.        போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பெனின் தேவகுமார், பெனட் ஜோஸ், ஜாண் கிறிஸ்டோபர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் சந்திரசேகர் போராட்டத்தை துவக்கினார்.

Similar News