மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரிடம் பணம் பறிப்பு

ரவுடி கைது;

Update: 2025-03-23 12:25 GMT
நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக் (29). இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். புவியூர் என்ற பகுதியை சேர்ந்த திவாகரன் (30) என்பவர் அவரிடம் வந்து தூக்க மாத்திரை கேட்டு உள்ளார். அப்போது தீபக் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அது போன்ற மாத்திரைகள் தயர இயலாது என்று கூறியுள்ளார்.       அப்போது நான் கேட்டால் தூக்க மாத்திரை தர மாட்டாயா?  என கேட்டு தீபக்கை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து, அவரது சட்டப் பையில் இருந்த ரூ. 500-ஐ திவாகரன்  பறித்துள்ளார். மேலும் தீபக் கண்  கண்ணாடியையும் உடைத்துள்ளார். இது குறித்து  தீபக் தென்தாமரை குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகரனை கைது செய்தனர்.  திவாகரன்  குற்றச் சரித்திர  பதிவேடு பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News