அரசரடி விநாயகர் திருக்கோவிலில் மண்டலபிஷேகம் நடைபெற்றது
விநாயகர் திருக்கோவிலில் மண்டலபிஷேகம் நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட அரசரடி விநாயகர் திருக்கோவிலில் மண்டலபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலஞ்சி வாய்க்கால் அருகே அமைந்துள்ள அரசரடி விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் தவறான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.