அகில இந்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு பயிற்சி 

மாணவர்களுக்கு பயிற்சி ;

Update: 2025-03-23 16:13 GMT
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும், பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.  இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யவும்.  மேலும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி,  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக்கல்லூரியில் தங்கிப்பயில உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும், 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.  மேலும் கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று IIT, NIT போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News