விருதுநகர் மாவட்டம்* *மல்லாங்கிணரில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம்* *மல்லாங்கிணரில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு;

Update: 2025-03-23 16:45 GMT
இந்தியாவிலேயே பெண்கள் 42 சதவிகிதம் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் முதல் மாநிலம் தமிழகம்;அடுத்த ஓர் ஆண்டில் ஒரு லட்சம் மகளிர் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவர்- விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு காரியாபட்டி திருச்சுழி நரிக்குடி விருதுநகர் சிவகாசி ஆகிய வட்டாரங்களில் பயன்பெறும் 104 பயானிகளுக்கு ரூ .63 லட்சத்து 29 ஆயிரத்து 232 ரூபாய் மதிப்பிலான 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 42 லட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவிய என மொத்தம் ஒரு கோடி ரூ.5 லட்சத்து 29 ஆயிரத்து 232 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே பெண்கள் 42 சதவிகிதம் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் முதல் மாநிலம் தமிழகம் என்றும் அந்த அளவிற்கு தமிழக பெண்கள் திறன் பெற்றிருக்கிறார்கள் என்றும் அப்படி திறன் பெற்றிருக்கிற பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். அடுத்த ஓர் ஆண்டில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்க திட்டம் வகுத்துள்ளதாகவும் பேசினார்.

Similar News