ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வேதனை.,விலைக்கு வாங்கி குடிநீர் அருந்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வேதனை.,விலைக்கு வாங்கி குடிநீர் அருந்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு;

Update: 2025-03-23 16:49 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வேதனை.,விலைக்கு வாங்கி குடிநீர் அருந்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திகுளம் - தெய்வேந்திரி ஊராட்சியில் காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் மற்றும் தண்ணீர் வழங்காததால் காலனி பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி குடிநீரை விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் அத்திகுளம்- தெய்வேந்திரி காலனி பகுதியில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : கனகராஜ்

Similar News