சாலை சீரமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு!

சாலை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்;

Update: 2025-03-23 17:00 GMT
வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் திருவள்ளுவர் தெரு உள்ளது. சாய்நாதபுரத்தில் இருந்து பலவன்சாத்துகுப்பம், அண்ணாநகர், ராஜீவ் காந்திநகர் செல்லும் பிரதான சாலையான இந்த சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்தது. இதனை சீரமைத்து தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார் பார்வையிட்டு தார்சாலை தரமாக போடப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

Similar News