வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், தேர்தல் வட்டாட்சியர் மேசியா தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்