பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

சிவகங்கையில் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது;

Update: 2025-03-24 03:51 GMT
மாவீரன் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட உதவி செயலாளர்கள் வழக்கறிஞர் மருது, கோபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் மணவாளன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் மாரி, மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா, சிவகங்கை நகர செயலாளர் சகாயம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட தலைவர் வீரபத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்

Similar News