இலவச வீட்டுமனை பட்டா : கலெக்டர் சந்திப்பு

திருவிதாங்கோடு;

Update: 2025-03-24 03:57 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கேரளபுதூர் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் சந்தித்து கலந்துரையாடி கூறியதாவது:-      நகர்ப்புற பகுதிகளில்  5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையில்லா அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருக்கும் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு  ஆணையிட்டுள்ளது.   அதனடிப்படையில் கல்குளம் வட்டத்துக்குட்பட்ட திருவிதாங்கோடு பகுதியில் அரசு நிலத்தினை ஆக்கிரமித்து குடியிருப்பு அமைந்துள்ள நிலமில்லாதவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு,  குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.         அவர்களில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது. இவ்வாறு கூறினார்.         நடைபெற்ற ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, கல்குளம் வட்டாட்சியர் சஜித்,  துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News