நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவீனா தலைமையில் நேற்று மாலை நாகர்கோவில் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது சோதனை சாவடி அருகே சந்தேக படும் வகையில் நின்ற முதியவர் ஒருவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுகுப்பின் முரணாக பேசியதால் அவரிடம் சோதனை நடந்தது. இதில் அவர் 750 மில்லி மது பாட்டில்கள் மூன்று பதுக்கி வைத்து நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த அருள் தம்பி தேவராய் (67) என்பது தெரியவந்தது. அவர் திருட்டுமது விற்பனை செய்வதற்காக நின்றதாக போலீசார் தெரிவித்தனர். அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.