கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. கிருஷ்ணர் பஜனை பாடல்களை பாடி, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோன்று, கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.