சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம்
சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்;
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், சகாய தைனேஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராம்குமார் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்