எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சுத்தமல்லி நகரத்தின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை 5:30மணிக்கு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.தொகுதி செயலாளர் சேக் முகமது பயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொருளாளர் வழக்கறிஞர் முபாரக் அலி தொகுப்புரையும், சுத்தமல்லி நகர செயலாளர் இல்யாஸ் வரவேற்புரையும், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அன்வர்ஷா, வழக்கறிஞர் இஸ்மாயில், தொகுதி தலைவர் தாழை இஸ்மாயில், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், திமுக ஒன்றிய கழக செயலாளர் கல்லூர் மாரியப்பன்,காங்கிரஸ் OBC பிரிவு மாநிலச் செயலாளர் ஹைதர் அலி,1வது வார்டு கவுன்சிலர் பரமசிவன், 3வது வார்டு கவுன்சிலர் ஜாகிர் உசேன்,6வது வார்டு கவுன்சிலர் அதிரதன்,தவெக மாவட்ட நிர்வாகி சேது,SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ரியாஸ் அஹமது,மற்றும் சுத்தமல்லி நகர நிர்வாகிகள் ஜாகிர் உசேன்,அப்துல் ரஷீத்,சதாம்,ரசாக்,ரபிக் பண்ணை,பீர்,அன்சாரி,பாதுஷா,முஸ்தபா,அல்ஷிபா,அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. இறுதியாக, பாரதி நகர் கிளை தலைவர், ரஹ்மத்துல்லாஹ் நன்றியுரை வழங்கினார்.