டிராக்டர் மீது ஜிப் மோதல் தொழிலாளி பலி 

ஆரல்வாய்மொழி;

Update: 2025-03-24 06:26 GMT
குமரி மாவட்டம் எட்டாமடை பகுதி சேர்ந்தவர் அருளானந்தம். கட்டிட தொழிலாளி. இவரும் அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவரும்  சேர்ந்து கட்டிட  வேலைக்காக கடந்த 18ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்ப திட்டமிட்டு,  ஜீப் ஒன்றில் பூதப்பாண்டி நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இரவு சுமார் 11.30  மணி அளவில் செண்பகராமன் புதூர்  அருகே வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஜீப் மோயது.       இதில் பின் இருக்கையில் அமர்ந்த அருளானந்தம் தரையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  உலகநாதன் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஜஸ்டின் என்பவருக்கு கண்ணில் படுகாயம் ஏற்பட்டது.        இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும்,  உயிரிழந்த அருளானந்தத்தை பிரத பரிசோதனைக்காகவும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜஸ்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.       இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News