தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது;
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 காளைகளும் 108 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.