இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி
சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலியான நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்;
சிங்கம்புணரி கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பிரசாந்த்குமார் (வயது 25). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் அதே தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் ( நவீன் 21 ) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அரணத்தங்குன்று அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில்நிலை தடுமாறி கீழே விழுந்த பிரசாந்த் குமார் மீது எதிரில் வந்த வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற நவீன், மற்றொரு டூவீலரில் சென்ற முத்து ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .