தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 24) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஒப்பந்த பணிகளில் கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.