கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு;

Update: 2025-03-24 10:40 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்துள்ள உளுத்திமடை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (30), கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி சித்திரை திருவிழாவைக் காண மானாமதுரைக்கு வந்திருந்தார். நள்ளிரவில் மானாமதுரை கண்ணாரிருப்பு சுடுகாடு அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் இருந்தபோது, மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அரியசாமி (40) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரியசாமி, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து மானாமதுரை போலீசார் அரியசாமி உட்பட 12 பேரை கைது செய்தனர். சிவகங்கையில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் இறந்துவிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட அரியசாமிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற ஒன்பது பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Similar News