விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!
வேலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் பரிஷித் (50), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 18ம் தேதி ராமாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பரிஷித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.